Tuesday, 25 December 2012

ஈரல் மிளகு வறுவல்

TamilKadalai Cooking


தேவையான பொருட்கள்

ஈரல் - 250கிராம்
சின்ன வெங்காயம் – 50கிராம்
பச்சை மிளகாய் – 1
வர மிளகாய் – 2
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை


அடுப்பில் வாணலியை வைத்து பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.. 
ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
வாணலியில் ஈரலை சேர்க்கவும்.
அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேக வைக்கவும். 
அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும்.

ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். 
பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். 
மிதமான தீயில் வைத்து வேகவிடவும். 
அவ்வப்போது கிளறவேண்டும்.
 எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். 
அதன் மீது கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிடும் போது மிக நன்றாக இருக்கும்.


Categories: