Tuesday, 25 December 2012

சிக்கன் கோலா உருண்டை

TamilKadalai Cooking


தேவையான பொருட்கள்

சிக்கன்                 - 1 /2  கிலோ
பொரிகடலை           - 100  கிராம்
பச்சை மிளகாய்         - 5 
மிளகு                  - 1ஸ்பூன்
தேங்காய்               -கால் பங்கு
சி.வெங்காயம்          - 1கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1ஸ்பூன்
கறிவேப்பிலை         - சிறிது
உப்பு                  - சிறிது
முட்டை              - 1

செய்முறை

கைமா சிக்கனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும், அதனுடன் பொரிகடலை, தேங்காய், ப.மிளகாய், மிளகு, சி.வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும். பின் சோம்பு, கறிவேப்பிலை, உப்பு,
முட்டை அனைத்தையும் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும் 5  நிமிடம் கழித்து எண்ணை கடாயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Categories: