TamilKadalai Natural Medicine's
அத்திப்பழம்
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.
தக்காளி
என்ன தக்காளியில் உலர்ந்தது உள்ளதா? ஆம் தக்காளியிலும் உலர்ந்தது உள்ளது. உலர் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நல்ல சுவையும் இருக்கும். மேலும் இதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபைன் அதிகம் உள்ளது.
ப்ளம்ஸ்
உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
ஆப்பிள்
ஆப்பிளில் கூட உலர்ந்ததா? புதிதாக உள்ளதா? உண்மை தான் உலர் ஆப்பிளில், சாதாரண ஆப்பிளை விட அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகளும் உள்ளன.
ப்ளூபெர்ரி
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.
மாம்பழங்கள்
கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.
ஆப்ரிக்காட்
இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.
செர்ரி
உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.
கிரான்பெர்ரி (Cranberry)
கிரான்பெர்ரியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
Categories:
இயற்கை மருத்துவம்