TamilKadalai Softwares
மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Outlook.com தளத்தில் உலகின் பிரம்மாண்டமான தொலைத் தொடர்பு சேவை உட்பட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியைத் தரும் ஸ்கைப் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்தமாக முதலில் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதியானது வெற்றியளிக்கும் பட்சத்தில் எதிர்வரம் வாரங்களில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கும் தரப்படவுள்ளது.மேலும் இவ்வசதியானது தனது பயனர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.