Thursday, 8 December 2011

பாகிஸ்தான் நடிகைக்கு ரூ.25 கோடி கேட்டு நோட்டீஸ்

மும்பை : பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக், பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். எப்எச்எம் என்ற ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்தில் அவரது முழு நிர்வாண படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பழமைவாத கருத்து கொண்ட பாகிஸ்தானில் அவருக்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ‘அந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தது உண்மை. நிர்வாண போஸ் தரவில்லை. ஆனால், ஒட்டு வேலை செய்து விட்டனர்’ என்று மறுத்தார் வீணா மாலிக். ஆனால், ‘அவர் பல கோணங்களில் நிர்வாண போஸ் கொடுத் தது உண்மை’ என்று பத்திரிகை தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஸி10 கோடி இழப்பீடு கேட்டு எப்எச்எம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் கபீர் சர்மா, போட்டோகிராபர் விஷால் சக்சேனா ஆகியோருக்கு வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதிலளித்து அவர்கள் சார்பில் வீணாவுக்கு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘ஆடையின்றி போட்டோ எடுக்கவும், வீடியோ பதிவுக்கும் அனுமதித்ததுடன்,

 உங்கள் முழு சம்மதத்துடன் அச்சான படங்களை சித்தரிக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறு. படப்பிடிப்பின் போது முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், இப்போது மறுத்து நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியாது. எங்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதால் நோட்டீசை திரும்ப பெற வேண்டும். தவறினால் ஸி25 கோடி இழப்பீடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்று வீணா மாலிக்குக்கு எப்எச்எம் அனுப்பிய நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.