சென்னை: காவிரி பிரச்னையை மையப்படுத்தி நடக்கும் தமிழக, கர்நாடக அரசியலைப் படமாக்குகின்றனர். இந்த படத்தில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கிறார்.
சி.எம். என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் படமாகிறது. இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கிறார். முதலில் இந்த
கேரக்டருக்கு அனுஷ்காவை அணுகினர். அவரிடம் கால்ஷீட் இல்லாததால் திரிஷாவை தேர்வு செய்துள்ளனர். கன்னட பதிப்பில் சிவராஜ் குமாரும் தமிழில் அர்ஜூனும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
தமிழக, கர்நாடக அரசியல் உறவுகளையும் மக்களின் தொடர்புகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு உள்ளது என்றார் படத்தின் இயக்குனர் ரகுராம்.
Categories:
சினிமா