Thursday, 6 October 2011

101வது பிறந்த நாளை கொண்டாடும் மூதாட்டிகள்


உலகிலேயே வயது கூடிய இரட்டை சகோதரிகள் தமது 101வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடியுள்ளனர்.
இரட்டை சகோதரிகளில் உலகில் வயது கூடியவர்களாக இவர்களே பெயர் பதித்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாரி மற்றும் கெப்ரியல் எனும் இரட்டை சகோதரிகளே இந்த சாதனைக்கு உரியவர்கள்.
1910ஆம் ஆண்டு பிறந்த இவர்கள் இப்போது பெல்ஜியம் ஸ்பா நகரிலுள்ள வயோதிபர் இல்லத்தில் வசிக்கின்றனர்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இச் சகோதரிகளின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது.