Wednesday, 5 October 2011

நிர்வாணமாக ஓடிய பெண்

சென்னை பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் பொட்டுத் துணி கூட இல்லாமல் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேய் என்று கூறி மக்கள் பீதியடைந்தனர்.

நேற்று பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் ஒரு இளம் பெண் உடைகளின்றி, தலைவிரி கோலமாக ஓடி வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் அப்போது ரோந்து வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோவிந்த் உடனடியாக மகளிர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

மகளிர் போலீஸார் போலீஸ் ஜீப்பில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து ஆடைகளை அணிவித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தென்கல்பாக்கம் கிராமம் ஆகும். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம்.

10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நான் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இதனால் எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன் என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தப் பெண் வந்த வழியெல்லாம் அவரைப் பார்த்த பொதுமக்கள் பேய் என நினைத்து ஓடி ஒளிந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்தப் பெண் சொல்வது உண்மையா அல்லது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.