Thursday, 6 October 2011

பாலினால் செய்த ஆடை ஜேர்மன் விஞ்ஞானியின் வெற்றி


பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை உற்பத்தி செய்வதில் ஜேர்மன் விஞ்ஞானியொருவர் வெற்றி கண்டுள்ளார்.
ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கும் இவ் விஞ்ஞானியான 28 வயதுடைய ஏன்க் டொமஸ் எனும் யுவதியே இவ்வாறு பாலாலான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளார்.
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி ஞஆடைஉh எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.
தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில்  இவ் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆடை வகைகள்  எதிர்காலங்களில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.