Tuesday, 4 October 2011

மாடல் அழகி பூனம் அரைநிர்வாண போஸ்


மும்பை செப். 5:பரபரப்புக்கு பேர் போன பிரபல மாடல் அழகி பூனம் பாண்டே தனது அரைநிர்வாண படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சோர்வடைந்த இந்திய அணியை சுறுசுறுப்பாக்க இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடந்தது. போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது, இந்திய மாடல் அழகி பூனம் பாண்டே (20) பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்திய அணி கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்பதுதான் அந்த அறிவிப்பு. அப்போதே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதாக எண்ணி மகிழ்ந்தார்கள் இளம் ரசிகர்கள். பூனம் பாண்டே கிரிக்கெட்டை கொச்சைப்படுத்துவதாகவும் பெண்களை கேவலப்படுத்துவதாகவும் மாதர் அமைப்புகள், கட்சிகளின் மகளிர் அணிகள் கொந்தளித்தன. பா.ஜ. மகளிர் அணி மும்பை போலீசில் பூனம் பாண்டே மீது புகார் கொடுத்தது. பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்த பரபரப்புக்கு நடுவே, ஏப்ரல் 2-ம் தேதி நடந்த பைனல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால், சொன்னது போல் செய்யவில்லை பூனம்.
‘தவிர்க்க முடியாத காரணங்களால், சொன்னதை செய்ய முடியவில்லை’ என்று பின்னர் ஒரு பேட்டியில் சொன்னார் பூனம்.
தற்போது, இங்கிலாந்துடனான டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், மீண்டும் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் பூனம் பாண்டே. தான் நீச்சல் உடையில் இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு அவர் அளித்திருக்கும் விளக்கம்: இங்கிலாந்தில் சமீபத்திய தோல்விக்கு பிறகு டோனி மற்றும் பாய்ஸ் சோர்ந்து போயிருக்கின்றனர். தற்போது நடந்து வரும் ஒருநாள் போட்டிகளில் எப்பாடு பட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தை நம் இந்திய டீமுக்கு தர வேண்டும். உலகில் இந்திய கிரிக்கெட்தான் எப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும்.
அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தவே இப்படி போஸ் கொடுத்திருக்கிறேன். தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை கண்டிப்பாக தோற்கடிக்கும். ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்தை இந்திய அணி வெற்றி கொள்ளும்போதெல்லாம் எனது கவர்ச்சிப்படங்களை தொடர்ந்து வெளியிடுவேன்.
இவ்வாறு டுவிட்டரில் பூனம் கூறியுள்ளார்.

Categories: