Wednesday, 5 October 2011

10 ஆண்டுகளில் 15 பேரை திருமணம் செய்த மன்மதன்

பத்திரிக்கைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம்,  நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வல்லபுழா பகுதியை சேர்ந்தவர் மஜீத். 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

6 மாத குடித்தனம்-அப்புறம் அடுத்த கல்யாணம்

பிறகு முதல் மனைவிக்கு தெரியாமல் பத்திரிகைகளில் மணப்பெண் தேவை என விளம்பரம் கொடுத்து மோசடி வேலையை தொடங்கினார்.

விளம்பரத்தில் தான் ஒரு அனாதை என்றும், தனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் குறிப்பிடுவார். பிறகு தனது நண்பர்கள் சிலருடன் பெண் பார்க்க செல்லும் மஜித் திருமணம் ஆன பிறகு அந்த பெண்ணுடன் 6 மாதம் குடித்தனம் நடத்துவார்.

பின்னர் அங்கிருந்து நைசாக நழுவும் அவர் மீண்டும் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்து அடுத்த பெண்ணை தேடுவார். இப்படியாக பாலக்காடு,  மலப்புரம்,  கோழிக்கோடு,  கண்ணூர் மாவட்டங்களை சேர்ந்த 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை வரதட்சனையாக பெற்று மோசடி செய்துள்ளார். கோட்டக்கல் போலீஸில் சிக்கினார்

மஜித்திடம் ஏமாந்த மலப்புரம் எடரிக்கோடு பகுதியை சேர்ந்த கதீஜா என்ற பெண் கோட்டக்கல் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் மஜித்தை கைது செய்து விசாரணை நடத்தியபோது இந்த தகவல்கள் வெளியாகின.

16 வயதுப் பெண்ணை மணக்க முயற்சித்தபோது கைது

16வது பெண்ணை ஏமாற்ற பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். மஜீத் ஏமாற்றிய பெண்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.