Tuesday 4 October 2011

ஒசாமா கொல்லப்பட்ட சேதி மகிழ்ச்சி அளிக்கவில்லை என்கிறார் புஷ்


வாஷிங்டன், செப்.6:  அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடையவில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
இது குறித்து ஆவணப்படங்கள் தயாரி்ககும் பீட்டர் ஸ்னால் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஜார்ஜ் புஷ் டல்லாஸில் ஓர் உணவகத்தில் இருந்தபோது அமெரிக்க அதிபர் ஒபாமா உங்களுடன் பேச விரும்புகிறார் என்று ரகசிய போலீசார் தெரிவித்தனர். அப்போது தான் அவருக்கு ஒசாமா கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த செய்தியைக் கேட்டு எனக்கொன்றும் மகிழ்ச்சியாக இல்லை என்று புஷ் எங்களிடம் தெரிவித்தார்.
அப்பாடா ஒரு வழியாக முடிந்தது என்ற உணர்வு தான் இருந்தது என்று கூறியுள்ளார்.
2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்னால் ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார். அதற்காக அவர் புஷ்ஷிடம் பேட்டி எடுத்துள்ளார். அவருக்கு புஷ் அளித்த பேட்டியில், இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது நான் புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்தேன். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஒரு கோபுரம் தாக்கப்பட்டுள்ளது என்றதும் ஏதோ சிறிய ரக விமானம் என்று முதலில் நினைத்தேன்.
வானிலை மோசமாக இருந்திருக்கும் அல்லது விமானிக்கு ஏதாவது நடந்திருக்கும் என்று நினைத்தேன். வெள்ளை மாளிகை தலைமை ஊழியர் ஆன்டி கார்ட்ஸ் இன்னொரு கோபுரமும் தாக்கப்பட்டது என்று காதில் மெதுவாகக் கூறினார். அப்போது தான் அது தீவிரவாதத் தாக்குதல் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார் புஷ்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று புஷ்ஷிடம் கேட்டதற்கு இந்த கேள்வியை வெறுக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

Categories: