Wednesday, 5 October 2011

குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவி

மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை,  பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும் விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில்,  நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது:

பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை,  மது குடிக்கும் பழக்கமுள்ள,  கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.

கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால்,  10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும்.

கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.

Categories: