Wednesday 5 October 2011

மணப்பெண் ஓட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் கட்டரம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாசிலமணி. இவரது மகள் பார்வதி(வயது 19). இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் மாரிச்சாமி(22) தங்கியிருந்து பிரபல தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பார்வதிக்கும் காதல் மலர்ந்தது.

இந்த காதல் விவகாரம் தெரியாமல் பார்வதிக்கு அவரது தந்தை மாசிலாமணி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.  மோகன்(25) என்பவரை மணமகனாக தேர்வு செய்து நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை(16 ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல் நாள் இரவே மணப்பெண் பார்வதி காதலன் மாரிச்சாமியுடன் ஊரைவிட்டு ஓடி விட்டார்.

இதனை அறியாமல் பார்வதி வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். மறுநாள் காலையில் எழுந்து திருமண நிகழ்ச்சிக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.

மணப்பெண் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாய் அறைக்கு சென்று பார்த்தபோது பார்வதியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் கிடக்கவில்லை

பின்னர் பக்கத்து வீட்டில் இருந்த மாரிச்சாமியும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பார்வதியின் தோழிகளிடம் விசாரித்த போது மாரிச்சாமியும் பார்வதியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததும் தெரிந்தது.

மறுநாள் அதிகாலையில் திருமணம் என்பதால் மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன பதில் செல்வது என்று பார்வதியின் பெற்றோரும் உறவினர்களும் வழி தெரியாமல் தவித்தனர்.

அதே முகூர்த்த நேரத்தில் எப்படியாவது திருமணத்தை நடத்தி விடவேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி மாசிலாமணியின் தம்பி மகளான துர்காவை மணமகளாக்கி மோகனுக்கு திருமணம் செய்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துர்கா திடீர் மணமகள் ஆனார். இதனை மாப்பிள்ளை வீட்டாருடன் ஏற்று துர்கா கழுத்தில் மோகன் தாலி கட்டினார்.

மணமகள் பார்வதி மாயமானது குறித்து அவரது தந்தை சோமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஓடிப்போன மணப்பெண் பார்வதி மற்றும் காதலன் மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.