சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும் எனக்கும் சண்டை சச்சரவு ஏதும் இல்லை என்று டைரக்டர் லாரன்ஸ் கூறினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. அடுத்து தெலுங்கில் ரீபெல் என்ற படத்தை இயக்குகிறார். இதில் அனுஷ்காவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அவர் நீக்கப்பட்டார்.
அனுஷ்காவுக்கு பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். லாரன்சுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனாலேயே படத்தில் அவர் தூக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு லட்சுமிராய் நடித்தார்.
இது குறித்து லாரன்சிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ரீபெல் படத்திற்கு அனுஷ்காவை தேர்வு செய்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க முடியாமல்போனது எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதை வைத்து எங்களுக்குள் சண்டை என்று வதந்திகள் பரவியுள்ளன. அனுஷ்காவுடன் எனக்கு எந்த தகராறும் இல்லை.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.
Categories:
சினிமா