சென்னை, செப்.7: நடிகை குஷ்புக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவு குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில், ‘‘இனி 5 ஆண்டு காலத்துக்கு தமிழக மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று கூறினார்.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த வக்கீல் அறிவழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘மக்கள் தீர்ப்பை அவமானப்படுத்தும் வகையில் பேசிய குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனருக்கு மனு கொடுத்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம் அதனை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.
Categories:
சினிமா