மும்பை: கரீனாவின் காதலர் சயீப் அலிகானுடன் நடித்தபோது அடிக்கடி ஷூட்டிங்குக்கு வரும் கரீனா என்னை கண்காணிக்கவில்லை என்று தீபிகா படுகோன் கூறினார்.
அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை பிரச்னை இல்லாத வேடங்களிலேயே இனி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். குறிப்பாக காதல் கதைகளையே தேர்வு செய்வேன். ரசிகர்களிடமிருந்து என்னை பிரிக்கும்படியான எந்த பாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன். சில ஹீரோயின்கள் மொட்டை போட்டு நடிக்கிறார்கள்.
அதுபோல் ஒருபோதும் நடிக்க மாட்டேன். காக்டெயில் இந்தி பட ஷூட்டிங்கில் சயீப் அலிகானுடன் நான் நடித்தேன். அப்போது கரீனா கபூர் அடிக்கடி ஷூட்டிங்கிற்கு வருவார். என்னை கண்காணிப்பதற்காகவே அவர் அங்கு வந்ததாக சிலர் கூறுகிறார்கள். அது தவறு.
அவர் ஷூட்டிங் வந்தாலும் என்னுடன் ஜாலியாக பேசுவார். அவர் வந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினாலும் கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான நேரம் அமையவில்லை. ரஜினியுடன் நடிக்கும் ‘ராணா’ படத்தின் நிலவரம் பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அதன் ஷூட்டிங்கிற்கு வரும்படி எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை.
இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.
Categories:
சினிமா