ஊட்டியில் நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீட்டில் கேரள மாநில வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மலையாளம் முன்னணி நடகரான மோகன்லால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன. ஊட்டியில் உள்ள அவரது பங்களாவில் கேரள அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் கேரள மாநில தொல்லியல் துறை ஜீப்பில் வந்து சோதனை நடத்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
மோகன்லால் பழங்காலப் பொருட்கள் யானைத் தந்தம் உள்ளிட்ட சில பாரம்பரிய பொருட்களை வாங்கிவைத்துள்ளதால் அதுகுறித்தும் சோதனை நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் என்ன காரணத்துக்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Categories:
சினிமா