டெல்லி, செப் 7: டெல்லி உயர்நீதி மன்ற நுழைவாயிலில் இன்று காலை 10.15 மணி அளவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5-வது வாயில் அருகே இன்று காலை 10.15 மணி அளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும், 27க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குண்டு ஒரு பிரீப் கேஸில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இன்று புதன் கிழமை என்பதால் நீதிமன்றத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். அந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தததால் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் அருகே இன்று காலை பணிக்கு வந்த ஊழியர் ஒருவர் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் குண்டு வெடித்ததற்கான தடயவியல் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Categories:
உலகம்