மும்பை: பேஷன் இதழ் அட்டைப்படத்துக்கு அரைநிர்வாண போஸ் தரவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் மறுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துவருபவர் காஜல் அகர்வால். ஆண்களுக்கான எப்எச்எம் பேஷன் இதழ் அட்டைக்கு இவர் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். அந்த அட்டைப்படமும் வெளியானது. ஆனால், நான் அரை நிர்வாண போஸ் தர வில்லை என்று காஜல் தற்போது மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது உண்மைதான். அப்போது, மார்பு பகுதியை கவ்வி பிடிக்கிற கருப்பு நிற ‘டியூப் டாப்’ மேலாடை அணிந்திருந்தேன். அட்டை படத்துக்காக பல போட்டோக்கள் எடுத்தார்கள். அவற்றை என் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். அந்த படங்கள் இப்போதும் என்னிடம் உள்ளன. ஆனால் அந்த இதழில் வெளியானதுபோல, டாப்லெஸ் போஸ் கொடுக்கவில்லை. மார்பிங் மூலம் இவ்வாறு செய்துள்ளனர். நான் பேட்டி கொடுத்ததாகவும் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எந்த பேட்டியும் அளிக்கவில்லை.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தன் மரியாதை, கண்ணியத்தை குலைக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காஜலின் குற்றச்சாட்டை எப்எச்எம் ஆசிரியர் கபீர் சர்மா மறுத்துள்ளார். ‘‘மும்பையில் ஆகஸ்ட் 18-ம் தேதி காஜல் அகர்வால், அட்டை படத்துக்கு போஸ் கொடுத்தார். அதை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். மார்பிங் எதுவும் செய்யவில்லை’’ என்று கூறியுள்ளார்.
Categories:
சினிமா