7ஆம் அறிவு படத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரு பாடலை இசையமைத்து அர்பணித்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் அசத்தலான நடிப்பில், ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக உருவாகி வரும் '7ஆம் அறிவு' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். .இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால், போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். பாடல்களுக்கான கடைசிக்கட்ட இசைக்கோர்ப்பு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ். இந்நிலையில் இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என நால்வரும் கலந்து ஆலோசித்து இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை முடிவு செய்திருக்கிறார்கள். அந்த தேதியை நடிகர் சூர்யா தற்போது அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் செப்டம்பர் 10 அன்று இப்படத்தின் பாடல்கள், சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்பட இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற இருக்கின்ற 'இன்னும் என்ன தோழா' என்ற பாடலை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இத்திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. |