Thursday, 18 August 2011

இந்துவாக மாறியதால் கோவில் வழிபாடுகளில் பங்கேற்கும் நயன்தாரா


பிரபுதேவாவை மணந்து கொள்ள நயன்தாரா இந்துவாக மாறினார். மதம் மாறும் சடங்குகள் சமீபத்தில் சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் கோவிலில் நடந்தது.
தற்போது அவர் முழு இந்துவாக காட்சி அளிக்கிறார். கோவில்களுக்கு சென்றும் வழிபட்டு வருகிறார்.நயன்தாரா புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தமாதம் பிரபு தேவா- நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்க உள்ளதாகவும், அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்குபடம் ஸ்ரீராமராஜ்ஜியம். இதில் சீதை வேடத்தில் நடித்துள்ளார். ராமன் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்தார். இந்த படத்தின் பாடல் சீ.டி. வெளியீட்டு விழா ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள சீதாராமச்சந்திரா கோவிலில் நேற்று இரவு நடந்தது.
இந்த கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலிலும் பிற மதத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை.
நயன்தாரா இந்துவாக மதம் மாறி இருப்பதால் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தின் பாடல் சீ.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்க பத்ராச்சலம் கோவிலுக்கு வந்தார். ஸ்ரீசீதா ராமச்சந்திரா கோவிலில் படக்குழுவினர் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடத்தினர்.
அதில் நயன்தாரா பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அதன்பிறகு விழாவில் கலந்து கொண்டார். இசை அமைப்பாளர் இளையராஜா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.