Monday, 22 August 2011

பாலிவுட் பிரபலங்களை சந்தித்த கார்த்திகா

டைரக்டர் கே.வி. ஆனந்த்தின் இயக்கத்தில் 'கோ' படத்தில் நாயகன் ஜீவா உடன் இணைந்து நடித்தவர் நாயகி கார்த்திகா.

தற்போது இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழில் வெற்றி பெற்ற 'கோ' படத்தை இந்தியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் நாயகியாக கார்த்திகா நடிக்க இருப்பதாக கூறுகிறது பட வட்டாரம்.

பாலிவுட் பட உலகிற்கு ஏற்ற நாயகியாக விழிகளில் பிரௌன் காண்டாக்ட் லென்ஸ், பளபளக்கும் 'நெய்ல் பாலிஸ்',காற்றில் தவழும் ஸ்டைலான கூந்தல் என தோற்றத்தோடு பாலிவுட் படப்புள்ளி டேவிட் தவான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் ஆகியோரை கார்த்திகா சந்தித்தாராம்.

கார்த்திகாவை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க 'தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகி' ராதாவும் படப்புள்ளிகளிடம் பேசியதாக கூறுகிறார்கள்.

மும்பையில் பிறந்து, வளர்ந்த கார்த்திகாவுக்கு இந்தி சரளமாக பேசத்தெரியும் என்பதால் சரியான இந்தி பட வாய்ப்பிற்காக ஆர்வமாக காத்திருக்கிறாராம்.