தி.மு.க.வில் சேர்ந்த குஷ்புவுக்கு முந்தைய அரசில் அமைக்கப்படவிருந்த மேலவையில் பதவி வழங்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் எந்த தொகுதியும் குஷ்புவுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் குஷ்பு. தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுக்கு போட்டியாக களமிறங்கி பணியாற்றிய குஷ்பு, தேர்தல் தோல்விக்குப் பிறகும் வடிவேலு போல ஒதுங்கி இருக்காமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைப்பாடுகள், அனைத்து கட்சியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்ததந்த கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் திமுகவுக்காக தொடர்ந்து பணியாற்றும் குஷ்புவை நிறுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை. |