Saturday, 27 August 2011

முதல் கணவருடன் விஜயகுமாரின் மகள் வனிதா

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது.

இவர் தற்போது தனது இரண்டாவது கணவரை பிரிந்து, மீண்டும் முதல் கணவருடன் இணைந்துள்ளார்.

தன் மகன் ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத்தவர் வனிதா.

இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பூதாகராமாக வெடித்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள்.

அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது முதல் கணவருடன் சேர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முதல் கணவர் ஆகாஷூம் என்னை புரிஞ்சுக்கலை. நானும் அவரை புரிஞ்சுக்கலை. என்னை பிரிந்த பின்னும் அவர் ஸ்ரீராமானாதான் வாழ்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சனைகளுக்கு பிறகு எனக்கு, அவர் மேல உள்ள அன்பும், மரியாதையும் இன்னும் கூடியிருக்கு. தனக்கு ஒரு ஸ்டெப் ஃபாதர் இருப்பதை ஸ்ரீஹரி விரும்பலை. அதனால்தான் அவன் என்னை பிரிய முடிவு பண்ணியிருக்கான்.

இப்போ அவனுக்காக நான் பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். ராஜனும் (2வது கணவர்) அதை புரிஞ்சுகிட்டு விலகிட்டார்.

என் பழைய குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கோம் என்று கூறியுள்ளார்

Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by